17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூர் ஜல்லிகட்டுவாடி வாசலை ஆட்சியர் வினய் ஆய்வு

அலங்காநல்லூர் ஜல்லிகட்டுவாடி வாசலை ஆட்சியர் வினய் ஆய்வு

எழுதியவர்: mohan January 9, 2020, 1:29 pm

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. பாதுகாப்பு மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியாளர்  வினய்  நேரடியாக பாா்வையிிட்டாா்.  இதில் மாடுபிடி வீரர்கள் இருபத்தி ஒரு வயதிற்கு மேல் 45 வயதுக்குள் இருக்கவேண்டும் எனவும் உடல் தகுதியானது இருந்தால் மட்டுமே மாடுபிடி வீரர்களை அனுமதிக்கப்படுவார்கள். மேலும் போட்டியில் பங்குபெறும் காளைமாடுகள் உரிய மருத்துவபரிசோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மாடுபிடி வீரர்கள் மது அருந்தி இருந்தாலோ அல்லது போதை வஸ்துகள் எதுவும் கொண்டு இருந்தாலும் அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார். மாடுகளை துன்புறுத்தவோ காயப்படுத்தினாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!