18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுரண்டையில் அமைத்திட வியாபாரிகள் சங்கங்கள் கோரிக்கை

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுரண்டையில் அமைத்திட வியாபாரிகள் சங்கங்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan January 9, 2020, 1:22 pm

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அமைத்திட வேண்டும் என வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டமாக உருவாக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வரும் நிலையில் தென்காசி மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுரண்டையில் அமைக்க வேண்டும் என சுரண்டை பகுதி வியாபாரிகள் சங்கங்களின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து வியாபாரிகள் சங்கத் தலைவர் காமராஜ், துணை தலைவர் சிவசக்தி முத்தையா, செய்தி தொடர்பாளர் ராஜகுமார், வத்தல் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ் ஏ தர்மராஜ், செயலாளர் ரத்தினசாமி, ராஜேந்திரன், முத்துமணி, மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், சேர்மச்செல்வம், தெய்வேந்திரன், தர்மம், மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் தயாள் சுந்தரை நேரில் சந்தித்து சுரண்டையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க தேவையான இடங்களை இலவசமாக ஏற்பாடு செய்து தருவதாக மனு வழங்கினர்.

ஏற்கனவே சுரண்டையில் அரசு கல்லூரி, வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ள நிலையில் சுரண்டை பகுதி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுக்கும் நடு மையமான நகரமாக விளங்குவதுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க தேவையான இடவசதி, போக்குவரத்து, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சுரண்டை பேரூராட்சி பகுதிக்குள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வியாபாரிகள் சங்கங்கள் உறுதியளித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!