17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின்துறை தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

மின்துறை தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

எழுதியவர்: mohan January 9, 2020, 1:06 pm

தமிழ்நாடு மின்வாரியத்தில் செயல்படும் தமிழ்நாடு மின்துறை அனைத்து பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், புதன் அன்று வேலை நிறுத்த போராட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தை ஆதரிக்கைகும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தியும், மாநிலம் முழுவதும் சங்க உறுப்பினர்கள் இன்று கோரிக்கை அட்டை அணிந்து, பணிக்கு சென்றனர். மாலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில இணைசெயலாளர் எஸ்.முருகன் தலைமை தாங்கினார், மாநில தலைவர் முனைவர் மா.முனியப்பன் சிறப்புரையாற்றினார், நிர்வாகிகள் கே.சாமுவேல், எம்.வெங்கடேசன், சி.எல்லப்பன், டி.பாண்டியன், ஆர்.சுப்பிரமணி, மு.பாபு, க.சீனுவாசன் உள்ளிட்ட கலந்து கொண்டனர். மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும், மின்சார சட்டதிருத்த மசோதாவை கைவிட வேண்டும், மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த தொரிலாளர் நிரந்தரம் செய் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி நிர்வாகிகள் உரையாற்றினர்.இந்த கூட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!