17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan January 8, 2020, 1:25 pm

ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகம் முன் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏஐடியுசி மாவட்ட பொது செயலர் என்.கே.ராஜன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பா.சண்முகராஜன், கே.களஞ்சியம், ஆர்.பார்த்திபன், சிஐடியுசி மாவட்ட தலைவர் எம்.அய்யாதுரை மாவட்ட துணை தலைவர் ஆர்.குருவேல், தொமுச நிர்வாகி வில்சன் அமல்தாஸ்,புறநகர் செயலாளர் ஆர்.செல்வக்குமார், சோஷியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் மாவட்ட தலைவர் முஸ்தாக் அகமது, மாவட்ட அமைப்பாளர் லியாகத் அலிகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும், பொதுத்துறைகளை தனியார்மயக்குவதை கைவிட வேண்டும். அழிவின் விளிம்பில் உள்ள சிறு, குறு தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!