17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழ்என்டபட்டி கிராமத்தில் பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலையத்தால் கர்ப்பிணிகள் பாதிப்பு. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கீழ்என்டபட்டி கிராமத்தில் பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலையத்தால் கர்ப்பிணிகள் பாதிப்பு. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan January 8, 2020, 1:19 pm
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட  பூகாண அல்லி ஊராட்சி  கீழ்என்டபட்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடப்பதால் கர்ப்பிணிகள் இரவு நேரங்களில் காய்ச்சல், விஷக்கடிகளுக்கு சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.கீழ்என்டபட்டி  கிராம செவிலியர் தங்கி சிகிச்சையளிக்கும்வகையில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் கிராம செவிலியர் தங்கி நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளிக்காமல் வெளியூர்களுக்கு சென்று விடுவதால், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடவும், விஷக்கடி, காய்ச்சல் உட்பட பல நோய்களுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுவட்டார கிராம மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதி கிராமத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் தர்மபுரி தனியார் மருத்துவமனை மற்றும் பாப்பாரப்பட்டி தனியார் மருத்துவமனைக்கு அதிக அளவில் சென்று வருகின்றனர். சொந்த கிராமத்தில் துணை சுகாதார நிலையம் இருந்தும் கர்ப்பிணிகள் பொதுமக்கள் பாப்பாரப்பட்டி, தர்மபுரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை, பரிசோதனைகள், தடுப்பூசிகள் போடும் அவலத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு துணை சுகாதார நிலையத்தில் கிராம செவிலியர்கள்தங்கி, சிகிச்சைகள், தடுப்பூசிகள் போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!