17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் பொங்கல் சிறப்பு கவியரங்கம்-பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டி

நெல்லையில் பொங்கல் சிறப்பு கவியரங்கம்-பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டி

எழுதியவர்: mohan January 8, 2020, 11:19 am

நெல்லை டவுண் அரசு நூலகம், வ.உ.சி நூலக வாசகர் வட்டம் இணைந்து பொங்கல் சிறப்பு கவியரங்கம் மற்றும் பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டி சிறப்பாக நடைபெற்றது.பாரதியார் உலகப்பொது மன்ற பொதுச் செயலாளர் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இசக்கிராஜா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச் செயலாளர் சு. முத்துசாமி முன்னிலை வகித்தார்.

பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாணவர் பேச்சிமுத்து முதலிடமும், மாணவி மாரி கண்ணு இரண்டாம் இடமும் பெற்றனர். பொங்கட்டும் பொங்கல் என்ற தலைப்பில் வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் ந. ஜெயபாலன் தலைமையில் சிறப்பு கவியரங்கமும் நடைபெற்றது. கவிஞர்கள் கோ. கணபதி சுப்பிரமணியன் பாப்பாகுடி இரா. செல்வமணி, ம. சக்தி வேலாயுதம், ஜெ. ஸ்ரீராம், தச்சைமணி, குமாரசாமி, செ.ச. பிரபு, மூக்குப்பீறி தேவதாசன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.நூலகர்கள் முனியப்பன் அவ்வையாழ்வார், கந்தசாமி, அமிர்த சகாயராஜ், வாஸ்து தளவாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலகர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!