18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் அதிகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் கொலை

மதுரையில் அதிகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் கொலை

எழுதியவர்: mohan January 8, 2020, 10:38 am

மதுரை தாமரை தொட்டி அருகே உள்ள பாரதி உலாவீதி ஒன்றாவது தெருவில் வசித்து வரும் குமரகுரு. இவர் மனைவி லாவண்யா (33.) இவர் இன்று 08.01.2020 அதிகாலை வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பியோட முயன்றபோது லாவண்யாவின் மாமியார் சீனியம்மாள் அவர்களை பிடிக்க முயன்றுள்ளார். அந்த இருவரும் சீனி அம்மாளையும் கத்தியால் குத்தி அங்கிருந்து தப்பி சென்றனர். அதையடுத்து கணவர் குமரகுரு கொடுத்த தகவலின் பேரில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகே உள்ள வடமலையான் மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா உயிரிழந்தார், சீனி அம்மாளுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!