இன்று எடை அளவில் வாங்கும் பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் உள்ளதா? என்றால், உறுதியாக யாராலும் கூற முடியாது. எப்பொழுதும் அனைவரும் ஓரு சந்தேக மனநிலையில் தான் பொருள் வாங்கி செல்வார்கள்.
பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் பனைக்குளம் மீன் சந்தை அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இலவசமாக எடை பார்க்கும் இயந்நிரம் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளில் பொருள் வாங்கும் பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள எடை இயந்திரம் மூலம் வாங்கும் பொருட்களை சரிபார்த்து கொள்ள ஏதுவாக உள்ளது. இது அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுபோல் ஒவ்வொரு ஊரிலும் உள்ள சமூக அமைப்புகள் இது போன்ற எடை இயந்திரத்நை நிறுவினால் பொதுமக்கள் பலன் அடைவார்கள்.




You must be logged in to post a comment.