18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவிலில் கொள்ளை

கோவிலில் கொள்ளை

எழுதியவர்: mohan January 8, 2020, 10:00 am

மதுரை மாவட்டம் தோப்பூர் சின்னக் கருப்பு கோவிலில் உள்ள 1 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள பூஜைப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். தோப்பூர் நான்கு வழி சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான இந்த பகுதியில்  மதியம்  மர்ம நபர்கள் கோவிலில் இருந்த சுமார் 10 கிலோ மதிப்புள்ள இரண்டு பித்தளை குத்துவிளக்கு மற்றும் பொங்கல் வைக்க வைத்திருந்த பித்தளை குடம் மற்றும் கரண்டிகள் பித்தளைத் தாம்பாளத் தட்டு உண்டியல் பணம் சுமார் 30 ஆயிரம் வரையிலும் கொள்ளை அடிக்கப்பட்டது என அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே 3 முறை இதே கோவிலில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மதுரை ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!