17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு பகுதியில் கரும்பு பூ எடுத்ததால் மகசூல் பாதிக்கும் அபாயம் கரும்பு விவசாயிகள் கவலை

பாலக்கோடு பகுதியில் கரும்பு பூ எடுத்ததால் மகசூல் பாதிக்கும் அபாயம் கரும்பு விவசாயிகள் கவலை

எழுதியவர்: mohan January 7, 2020, 11:11 am
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கிவருகின்றது.தமிழ்நாட்டில் இயங்கும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும்.இந்த ஆலையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் கரும்பு அரவைப் பணி நடக்கும். இதில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். இந்தக் கரும்பாலைக்குப் பாலக்கோடு சுற்றியுள்ள மல்லாபுரம், பெல்ராம்பட்டி, வெள்ளிச்சந்தை, கோடியூர், வெலாம்பட்டி, திம்மம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்ட அள்ளி, சாமனூர், காரிமங்கலம் பெரியாம்பட்டி, தும்பல அல்லி போன்ற பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைந்த கரும்பைப் பதிவு செய்து ஆலைக்குக் கொடுத்து வருகின்றனர். நான்கு லட்சம் மெட்ரிக் டன் வரை சர்க்கரையை உற்பத்தி செய்து தேசிய அளவில் நற்சான்று பெற்ற பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பது குறிப்பிடத்தக்கது.
 கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து பருவமழை மாவட்டத்தில் குறைந்த வண்ணம் உள்ள நிலையில் அணைகள் ஏரிகள் குட்டைகள் நீர்நிலைகள் வெற்றி உள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது. மேலும் சில வருடங்களாகவே இப்பகுதியில் தொடர்ந்து பருவமழை குறைந்து போன நிலையில் சில விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து சொட்டுநீர் பாசனம் மூலம் குறைந்த அளவே கரும்பு பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். நடப்பாண்டில் சுமார் 15 ஆயிரம் டன் அளவிற்கு கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது கரும்பு பூ எடுத்ததால் மகசூல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சர்க்கரை ஆலை நிர்வாகம் நடப்பாண்டில் ஆலையை திறக்குமா அல்லது மூடுமா என்ற கேள்விக்குறி உள்ளதால் விவசாயிகள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக கரும்பு வெட்டி மற்றொரு ஆலைகளுக்கு அனுப்பவும், இதற்கான முழு செலவு தொகையை அரசே ஏற்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!