17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நகராட்சி » கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி ….

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி ….

எழுதியவர்: ஆசிரியர் May 11, 2017, 1:03 pm

1426ஆம் பசலிக்கான ஜமாபந்தி கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வு 11-5-17ல் திருஉத்திரகோசமங்கை பிர்க்காவிற்கும், 12-05-17ல் கீழக்கரை பிர்க்காவிற்கும், மற்றும் 16-05-17ல் திருப்புல்லாணி பிர்க்காவிற்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

கீழக்கரை வட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் பட்டா மாறுதல் மற்றும் நிலப்பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்து விதமான மனுக்களையும் ஜமாபந்தி அலுவலர் வசம் வழங்கி பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை தாசில்தார் இளங்கோவன் , சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா, ஜமாபந்தி தலைமை உதவியாளர் ராஜபாண்டி, மண்டல துணை தாசில்தார் பெனித குமார், வருவாய் ஆய்வாளர் கோகிலா காளிஸ்வரன், முனியம்மாள், கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பையா, தமிழ்ச்செல்வன், பூபதி உள்ளிட்ட அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மைத்துறை மற்றும் புள்ளியல் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!