18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பதவியேற்பு.!

நிலக்கோட்டை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பதவியேற்பு.!

எழுதியவர்: Askar January 6, 2020, 10:23 pm

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பதவி ஏற்றனர்.

நடந்து முடிந்த தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கும், 20 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கும், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள்  அதிமுக 10 திமுக- 7 மற்றும் பாமக – 1 சுயேச்சைகள் – 2  மேலும் 22- ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கும் 217 வார்டு உறுப்பினர் பதவிக்கும், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர். மேலும் அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர்களும் ரகசிய காப்பு உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்டனர். மேலும் தேர்தலில் வெற்றி பெற்று பதவிகளுக்கு வந்த தலைவர்கள், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு, தங்களின் ஆதரவாளர்கள் சாலையில் பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்தும் கொண்டாடினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!