18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதியவரை தாக்கிய வாலிபா் கைது

முதியவரை தாக்கிய வாலிபா் கைது

எழுதியவர்: mohan January 6, 2020, 10:57 am

கன்னியாகுமரிமாவட்டம்  நாகர்கோவில் கீழ மறவன்குடியிருப்பை சேர்ந்தவர் தங்கசாமி(70). இவர் ஊர் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த பாபின்(18) என்பவர் கோவிலினுள் ஷூ காலுடன் நுழைந்தார். இதை தங்கசாமி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாபின், கெட்டவார்த்தை பேசி தங்கசாமியை கையலும், கம்பாலும் கொலை செய்யும் நோக்குடன் தலையில் தாக்கி கீழே தள்ளினார். இதில் தங்கசாமி படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் அவர்கள் குற்றவாளி பாபினை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். பாபின் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!