திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பண்ணைபட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்( 60) இவருக்கு அருகே உள்ள கோம்பையில் தோட்டம் உள்ளது. மாலை தோட்டத்திற்கு செல்லும் வழியில் விவசாயி முருகேசனை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து முருகேசன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்புவதற்காக கன்னிவாடி வனத்துறை மற்றும் காவல்துறையினர் சென்றபோது பொதுமக்கள் அவர்களை முற்றுகை இட்டதோடு ஒட்டன்சத்திரம் – செம்பட்டி சாலையில் பண்ணப்பட்டி பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒட்டன்சத்திரம் அருகே யானை தாக்கி ஒருவர் பலி
எழுதியவர்: mohan January 6, 2020, 10:25 am




You must be logged in to post a comment.