18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரயில் மோதியதில் தலை துண்டாகி வாலிபர் பலி

ரயில் மோதியதில் தலை துண்டாகி வாலிபர் பலி

எழுதியவர்: mohan January 6, 2020, 10:15 am

மதுரை தெற்குவாசல் அருகே ராமேஸ்வரம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் பாதையில் ரயில் மோதியதில் ஒரு இளைஞர் தலை துண்டாகி இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை ரயில்வே காவல்துறையினர் இறந்த வாலிபர் யார் எந்த ஊர் எந்த பகுதியை சேர்ந்தவர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ரயில்வே காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இவரைப்பற்றிய அடையாளம் தெரிந்தவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என ரயில்வே காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!