18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » CAA ( ம) NRC விளக்கப் பொதுக் கூட்டம்

CAA ( ம) NRC விளக்கப் பொதுக் கூட்டம்

எழுதியவர்: mohan January 5, 2020, 10:51 am

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெரியகுளம் நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் “சமய நல்லிணக்கம் (ம) CAA, NRC விபரீதங்களை விளக்கி மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு பெரியகுளம் நகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அப்துல் காதிர் தலைமை தாங்கினார். அனைத்து பள்ளி வாக் இமாம்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தென்கரை பள்ளிவாசல் முன்னாள் தலைமை இமாம் முஹம்மது அலி, ஜமாஅத்துல் உலமா சபை துணைச் செயலாளர் அஹமது பெளஜீத்தின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

செயலாளர், நகர,மாவட்ட செயலாளர் , நிஜாமுத்தீன் தொகுத்து வழங்கினார். சையது இஸ்மாயில், முஹம்மது உமர் அலி, முஹம்மது ஹுஸைன், அஜீஸூர் ரஹ்மான் முஹம்மது உஸ்மான் அலி, அப்துல் ரஹ்மான் ஆகியோர் துவக்கவுரை நிகழ்த்தினர்.சி.எஸ்.ஐ சபை குரு.ஸ்டாலின் பிரபாகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் கனிய முதன், திண்டுக்கல் தாருல் உலும் யூஸுபிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் காஜா நிஜாமுத்தீன், எழுத்தாளர் மதிமாறன், மக்கா மஸ்ஜீத் தலைமை இமாம் முஹம்மது மன்சூர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இமாம் அஹமது பயாஜ் நன்றியுரை வழங்கினார். இக்கண்டன விளக்கப் பொதுக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம், தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் கோவிந்தராஜ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிறுபான்மைப் பிரிவைச் சார்ந்த ஆலிம் அஹமது முஸ்தபா உட்பட அனைத்துப் பள்ளி இமாம்கள், கிறிஸ்தவர்கள், தலித்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!