18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரையில் துப்பாக்கி முனையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 170சவரன், 20லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் கொள்ளை .

மதுரையில் துப்பாக்கி முனையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 170சவரன், 20லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் கொள்ளை .

எழுதியவர்: mohan January 4, 2020, 3:31 pm

மதுரை கூடல்புதூர் அருகே அப்பாத்துரை முதல்தெரு பகுதியில் அரசு ஒப்பந்ததாரரான சோலை குணசேகரன் தனது மனைவியுடன் வசித்துவருகிறார்.இந்நிலையில் இவர் வீட்டிக்கு வந்த மர்ம நபர்கள் தங்களை வருமானவரி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் என அறிமுகம் செய்து கொண்டு அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பதாக கூறி ஆவணங்களையும், தங்க நகைகள் பணங்களையும் வெளியில் எடுத்து தர சொன்ன நிலையில் அனைத்தையும் வெளியில் எடுத்துவைத்த போது வீட்டுக்குள் இருந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திஇருந்த துப்பாக்கியை காட்டி 170 சவரன் தங்க நகை, 2.8 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதனையடுத்து செய்வதறியாது திகைத்த குணசேகரன் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரை தொடர்ந்து கூடல்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.ஒப்பந்தகாரர் சோலை குணசேகரன், அதிமுக மாநில நிர்வாகி சோலை ராஜாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!