17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் மறைவு

நெல்லை முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் மறைவு

எழுதியவர்: mohan January 4, 2020, 10:29 am

நெல்லை முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் வைத்து உயிரிழந்தார்.

1985 முதல் 1989ம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்தவர் பி.ஹெச்.பாண்டியன்.அதிமுகவில் மூத்த நிர்வாகிகளில் ஒருவராகவும் செயல்பட்டவர்.பி.ஹெச்.பாண்டியன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.சசிகலா அதிமுகவை வழிநடத்த எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அணியில் இணைந்து செயல்பட்டவர். அதிமுக சார்பில் 3 முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.ஹெச்.பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!