17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு

எழுதியவர்: mohan January 4, 2020, 10:13 am

மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கேதுவார்பட்டியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகேசன் என்பவர் போட்டியிட்டு இருந்தார்.நேற்று வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்தார்.இதனால் விரக்தியடைந்த முருகேசன், நீங்க இப்படி செய்வீங்கன்னு, கனவில் கூட எதிர்பார்க்கவில்லை என்றும், தோற்கடித்த மக்களுக்கு நன்றி எனவும் கூறி போஸ்டர் ரெடி செய்துள்ளார். இந்த போஸ்டரை டிஜிட்டல் வடிவிலும் சமூக வலைதளங்களில் அவர் உலவ விட்டுள்ளார். சுவர்களிலும் சில போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மதுரைக்கும் போஸ்டருக்கும் அப்படி என்னதான் நெருக்கமோ தெரியவில்லை, எப்போதும் மதுரை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் அடிக்கும் போஸ்டர்களும், பேனர்களும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். அந்தளவுக்கு அதில் வாசகங்கள் இடம் பெற்றிருக்கும்.தோற்கடிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட முதல் போஸ்டர் இது தான் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!