17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புத்தாண்டு விடுமுறையில் பணி செய்வோர்க்கு வழிகாட்டி மனிதர்கள் நேரில் வாழ்த்து.

புத்தாண்டு விடுமுறையில் பணி செய்வோர்க்கு வழிகாட்டி மனிதர்கள் நேரில் வாழ்த்து.

எழுதியவர்: mohan January 2, 2020, 7:22 am

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் ஆங்கில புத்தாண்டு விடுமுறை தினத்தில் மக்கள் நலனுக்காக பணி செய்யும் காவல்துறை மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தும் வகையில் கடலை மிட்டாய் மற்றும் பேனா வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்: பொது மக்கள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் புத்தாண்டு கொண்டாட காவல்துறையினர் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் விடுமுறை இன்றி பணி செய்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நகரின் பல பகுதிகளில் மாநகர காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை நேரில் சந்தித்து கடலை மிட்டாய் மற்றும் பேனா வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தோம். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் மாயகிருஷ்ணன், அசோக்குமார், இளையவர்கள் நித்தீஷ்குமார், ஷஸ்மிதா மற்றும் சுதர்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!