17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளத்தில் பதற்றம்: பல்வேறு இடங்களில் சாலை மறியல் : போக்குவரத்து ஸ்தம்பித்தது

பெரியகுளத்தில் பதற்றம்: பல்வேறு இடங்களில் சாலை மறியல் : போக்குவரத்து ஸ்தம்பித்தது

எழுதியவர்: mohan January 1, 2020, 3:27 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தில் கார்த்திக் என்ற 22 வயது இளைஞனை நேற்றிரவு31.12.19 மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து விட்டனர்.மேற்படி கொலைக்கு காரணமான கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை இறந்தவர்களது உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் ஜெயமங்கலம் வைகை அணை சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே போல் பெரியகுளம் – தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புதிய தமிழகம் கட்சியின் தேனிமாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஆண்டிபட்டி சரக காவல் துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார். குற்றவாளிகள் சிறிது நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் உத்திரவாதம் அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை ஒரு மணி நேரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர். குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யாத பட்சத்தில் போராட்டம் தொடரும் என்று எச்சரித்தனர்.

 சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!