17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை உசுவதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் பரிசளிப்பு விழா…

கீழக்கரை உசுவதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் பரிசளிப்பு விழா…

எழுதியவர்: ஆசிரியர் December 30, 2019, 7:27 pm

கீழக்கரை மேலத்தெரு உசுவதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் சார்பாக கீழக்கரை அளவில் நடைபெற்ற மார்க்க போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழக்கரையில் கடந்த மூன்று வருடங்களாக மேலத்தெரு உசுவதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் சார்பாக பல்வேறு மார்க்க போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன . இந்த ஆண்டு கடந்த மூன்று நாட்களாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி மேலத்தெரு 9 பங்களா வளாகத்தில் காலை 11. 45 மணி அளவில் நடைபெற்றது. இதில் கிராத், குர்ஆன் மனனம், திலாவா, தமிழ் மற்றும் ஆங்கில பயான், பாங்கு போட்டி, ஹதீஸ் மனனம், குர்ஆன் சூராக்கள் பெயர் மனனம் என ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலர் கலந்துகொண்ட போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை மேலத்தெரு புது பள்ளிவாசல் இமாம் மன்சூர் ஆலிம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் S.S.H.மௌலானா ,N.D.Sஅமீர் அலி , S.M.A.Jஅப்துல் ஹலீம், P.S.M.அர்ஷத் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியை முகமது சதக் பொறியியல் கல்லூரி பேராசிரியர் S.M.N.அஹமது ஹுசைன் ஆசிப் தொகுத்து வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!