18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் பிரபல ஜவுளிக்கடையின் பெயர் பலகையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு.!

நெல்லையில் பிரபல ஜவுளிக்கடையின் பெயர் பலகையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு.!

எழுதியவர்: Askar December 29, 2019, 10:44 pm

நெல்லையில் பிரபல ஜவுளிக்கடையின் பெயர் பலகையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு.!

நெல்லையில் பிரபலமான ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து, ஜங்ஷன் நோக்கி செல்லக்கூடிய பிரதான சாலையில் சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடை அமைந்துள்ளது. இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும்.பிரபலமான இந்த ஜவுளி கடைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் டிச.28 இரவு, கடையின் மேல் பகுதியில்,பண்டிகை காலத்தை முன்னிட்டு அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அதில் வைக்கப்பட்டிருந்த சரவணா செல்வரத்தினம் என்ற பெயர் கொண்ட விளம்பர அறிவிப்பு போர்டு திடீரனெ தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. இதனால் கடையிலிருந்த வாடிக்கையாளர்கள் அவசரமாக வெளியேறினர். இது குறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டையில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்திற்கு மின்கசிவே காரணம் என ஜவுளி கடையினர் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்ற போதிலும், வாகன நெரிசல் உள்ள ஒரு சாலை பகுதியில், அமைந்துள்ள, கடையில், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!