இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிறுவர் மன்ற குழந்தைகளுக்கு விளையாட்டு குழு தேர்வு கோரவள்ளி தொடக்க பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ரூரல் ஒர்க்கர்ஸ் டெவெலப்மென்ட் சொசைட்டி இயக்குநர் சாத்தையா
தலைமை வகித்தார். கோ-கோ, கபடி, வாலிபால், சதுரங்கம், கேரம் விளையாட்டுகளுக்கு ஒன்றிய அளவிலான குழு தேர்வு செய்யப்பட்டது.இதில் ஏராளமான ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.திருப்புல்லாணி ஒன்றியத்தில் உள்ள கிராமப்புர சிறுவர் மன்ற குழந்தைகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறந்த வீரர்கள் அடங்கிய விளையாட்டு குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர்கள் தினகரன் காமராஜ் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்தனர். ராமநாதபுரம் ரூரல் ஒர்க்கர்ஸ் டெவெலப்மென்ட் சொசைட்டி பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.
மண்டபம் ஒன்றிய சிறுவர் மன்ற குழந்தைகள் விளையாட்டு குழு தேர்வு
எழுதியவர்: mohan December 28, 2019, 12:10 pm




You must be logged in to post a comment.