மதுரை திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை திருப்பரங்குன்றம் பசுமலை திருநகர் பைகாரா மற்றும் பைபாஸ் சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் சாலை ஓரங்களில் மணல் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதை மாநகராட்சி அதிகாரிகளிடம் அகற்றச் சொல்லச் சொன்னால் மாநகராட்சி அதிகாரிகள் இது எங்கள் பணி அல்ல தேசிய நெடுஞ்சாலைத்துறை தான் அல்ல
வேண்டும் என தட்டிக் கழித்து விட்டனர். பிறகு தேசிய நெடுஞ்சாலை துறையிடம் இதுகுறித்து புகார் கொடுத்தபோது இது எங்களது வேலை அல்ல மாநகராட்சி தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என இவர்களும் அலட்சியமாக பதில் அளிப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மணலில் சிக்கி படுகாயம் ஏற்படுகிறது. உயிர் பலி வாங்கிய பிறகு இவர்கள் பனிப்போர் விலகுமா என கேள்வியும் எழுப்புகின்றனர். இவர்கள் போட்டியில் பொறுப்பற்ற அதிகாரிகளின் செயல்களால் உயிர்பலி ஆகப்போவது அப்பாவியின் பொதுமக்களே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.