தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே இளைஞர் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலைச் சம்பவம் பழிக்கு பழியாக நடந்ததா? வேறு எதுவும் காரணம் உள்ளதா என ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள நெட்டூரைச் சேர்ந்தவர் குமார் என்ற கெவுலிகுமார் . 30 வயதாகும் இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் மீது ஆலங்குளம் , பாப்பாகுடி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.
இந்நிலையில் டிச.27 மாலை ஆலங்குளம் ராம்நகர் பகுதியில் குமார் ஒரு டீ கடை அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடிரென அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டது.இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலை சம்பவம் கடந்த ஆண்டு குமார் அருகில் உள்ள குத்தப்பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த பால்வியாபாரி ஒருவரை கையை வெட்டியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பழிக்கு பழியாக நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும்,வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகளையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.