இராமநாதபுரம் அருகே ஆர்எஸ் மடை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். சத்திரக்குடி அருகே
அரியகுடியைச் சேர்ந்தவர் கீர்த்திகா, 20. இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளான நிலையில், நிறைமாத கர்ப்பிணியான கீர்த்திகாவுக்கு நேற்று (27/12/2019) மாலை பிரசவ வலி ஏற்பட்டது.
இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சிய போக்கால் தாயும், ஆண் குழந்தையும் பலியாகினர். இதனால் ஆவேசமடைந்த கீர்த்திகாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




You must be logged in to post a comment.