17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடல் சார் உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்..

கடல் சார் உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்..

எழுதியவர்: ஆசிரியர் December 28, 2019, 9:05 am

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம்ää கீழக்கரை வனச்சரகம் மற்றும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகமும் இணைந்து கடல் சார் உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன்  தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வளைகுடா உயிர் கோள காப்பகத்தின் மண்டல இயக்குநர் லோகநாதன், கீழக்கரை வனச்சரகர்  அருண் பிரகாஷ், திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளைத் தலைவர் லதா மதிவாணன், கீழக்கரை வனச்சரக அதிகாரிகள் மற்றும் கலைக் குழுவினர்கள் பங்கேற்று அழிந்து வரும் அரிய கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டை, கடல் ஆமை, கடல் பசு பாதுகாப்பு மற்றும் கடல் நீரில் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பேரா.சுலைமான், பேரா.முகம்மது அஜீஸ் மற்றும் பேரா. எஸ்தர் கண்மணி ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைந்ததற்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் முகம்மது யூசுஃப் செயலர் ஷர்மிளா மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!