17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கைலிக்கு நவீன அடையாளம் கொடுத்த கீழக்கரை “Black & White Lungiez”

கைலிக்கு நவீன அடையாளம் கொடுத்த கீழக்கரை “Black & White Lungiez”

எழுதியவர்: ஆசிரியர் December 27, 2019, 11:21 pm

கைலி என்றாலே மிகவும் சாதாரண நேரத்திலும், ஓய்வு நேரத்திலும் உடுத்த கூடிய உடையாக அடையாளம் கொண்டிருந்ததை இன்று நவ நாகரீக உடையாகவும், விசேஷ காலங்களில் இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் உடுத்தும் நவீன ஆடையாக உருமாற்றம் செய்துள்ளார்கள் கீழக்கரை S.N தெருவில் அமைந்துள்ள Black & White Lungiez நிறுவனத்தினர்.

ஆம், கைலி என்றாலே வெளியே உடுத்தி செல்ல வெள்ளை கைலி மற்றும் சாதாராண சமயங்களில் உடுத்தி கொள்ள வண்ண கைலி என்ற நிலையை மாற்றி, வண்ண வண்ண கண்கவர் கைலிகளை உலகில் உள்ள பல்வேறு பகுதிகளான இந்தோனேசியா, பங்களாதேஷ், ஓமன் போன்ற நாடுகளில் இருந்து கைகளால் நெய்யப்பட்ட மற்றும் இயந்திரங்களால் பின்னப்பட்ட கைலிகளை பல வகையான டிசைன்களை இளைஞர்கள் விரும்பும் வண்ணம் வரிசைபடுத்தியுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!