17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி முதல் கட்ட தேர்தல் 69.63 சதவீதம் வாக்குப் பதிவு…

இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி முதல் கட்ட தேர்தல் 69.63 சதவீதம் வாக்குப் பதிவு…

எழுதியவர்: ஆசிரியர் December 27, 2019, 11:01 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில்,  இராமநாதபுரம் ஒன்றியத்தில் 25 மண்டபம் ஒன்றியத்தில் 28, திருப்புல்லாணி ஒன்றியத்தில் 33, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் 35, திருவாடானை ஒன்றியத்தில் 47 பேர் என 168 ஊராட்சி தலைவர் பதவிகள், 81 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 1290 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 8 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு இன்று வாக்கு பதிவு நடந்தது. ராமநாதபுரம் ஒன்றியத்தில் 70, 702, திருப்புல்லாணி ஒன்றியத்தில் 75,074, மண்டபம் ஒன்றியத்தில் 1,18, 879, ஆர்.எஸ்.மங்கலத்தில் 61,294, திருவாடானை ஒன்றியத்தில் 88, 968 என 4 லட்சத்து 14 ஆயிரத்து 917 வாக்காளர்கள் உள்ளனர். 11 மணி நிலவரப்படி,ராமநாதபுரம் ஒன்றியத்தில் 24.96 சதவீதம், திருப்புல்லாணி ஒன்றியத்தில் 25.32 சதவீதம்,மண்டபம் ஒன்றியத்தில் 23.20 சதவீதம், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் 31.61 சதவீதம், திருவாடானை ஒன்றியத்தில் 28.43 சதவீதம் என 5 ஒன்றியங்களிலும் 26.25 சதவீத வாக்குகள் பதிவாகின.ஒரு மணி நிலவரப்படி ராமநாதபுரம் ஒன்றியத்தில் 15, 658 பெண்கள் உள்பட 28,892 பேரும், திருப்புல்லாணி ஒன்றியத்தில் 16, 904 பெண்கள் உள்பட 30, 232 பேரும்.  மண்டபம் ஒன்றியத்தில் 24, 119 பெண்கள் உள்பட 45,295 பேரும் வாக்களித்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் 16,707 பெண்கள் உள்பட 31,641 பேரும், திருவாடானை ஒன்றியத்தில் 22,855 பெண்கள் உள்பட 42,402 பேரும் வாக்களித்தனர். மூன்று மணி நிலவரப்படி ராமநாதபுரம் ஒன்றியத்தில் 20, 985 பெண்கள் உள்பட 37,915 பேரும், திருப்புல்லாணி ஒன்றியத்தில் 22,358 பெண்கள் உள்பட 39,438 பேரும், மண்டபம் ஒன்றியத்தில் 33,077 பெண்கள் உள்பட 60,322 பேரும்  வாக்களித்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் 21,146 பெண்கள் உள்பட 39,461 பேரும், திருவாடானை ஒன்றியத்தில் 28,120 பெண்கள் உள்பட 53,164 பேரும் வாக்களித்தனர். 5 மணி நிலவரப்படி ராமநாதபுரம் ஒன்றியத்தில் 26, 919 பெண்கள் உள்பட 47,875 பேரும், திருப்புல்லாணி ஒன்றியத்தில் 27,933 பெண்கள் உள்பட 49,256 பேரும், மண்டபம் ஒன்றியத்தில் 42,120 பெண்கள் உள்பட 76,746 பேரும்  வாக்களித்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் 23,886 பெண்கள் உள்பட 44,774 பேரும், திருவாடானை ஒன்றியத்தில் 33,192 பெண்கள் உள்பட 61,947 பேரும் வாக்களித்தனர். 5 ஒன்றியங்களிலும் 1,26,547 ஆண்கள், 1,54,050 பெண்கள் வாக்களித்தனர். 69.63 சதவீத வாக்குகள் பதிவாகின.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!