18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திடீர் ஆர்ப்பாட்டம் : நூற்றுக்கணக்கான இசுலாமியர்கள் கைது ..

திடீர் ஆர்ப்பாட்டம் : நூற்றுக்கணக்கான இசுலாமியர்கள் கைது ..

எழுதியவர்: mohan December 27, 2019, 6:59 pm

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,  வாபஸ் பெறக்கோரியும் அனைத்து இசுலாமிய இயக்கங்கள் சார்பில் இசுலாமியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தேசியக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இசுலாமியர்கள் மற்றும்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரின் தடையை மீறி ஆர்பாட்டம் நடைபெறப்போவதாக உளவுத்துறையினர் கூறியதை தொடர்ந்து பெரியகுளம் பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் போடப்பட்டுள்ள பாதுகாப்பை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாய் சரண் தேதஸ்வி  நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பினை உறுதி செய்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பெரியகுளம் – தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட இசுலாமியர்கள் (ம) தேனி கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் rகட்சியினர் பெரியகுளம் பகுதியில் உள்ள பொன்ளை யாதனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

சாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!