18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டுமென்ற அம்மாவின் கனவை முதல்வர் எடப்பாடி நனவாக்கியுள்ளார் -அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டுமென்ற அம்மாவின் கனவை முதல்வர் எடப்பாடி நனவாக்கியுள்ளார் -அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

எழுதியவர்: mohan December 27, 2019, 4:17 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் டிசம்பர் 30ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் மாவுட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயக்குமார், செல்லம்பட்டி கணவாய்ப்பட்டி, உத்தப்பநாயக்கணூர், போன்ற பகுதிகளில் இரட்டைஇலை சின்னத்தில் திறந்த வாகனத்தில் சென்று வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.மேலும் தமிழக அரசின் பல்வேறு சாதனைகளை சுட்டிகாட்டி பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார்.மேலும் அவர் கூறும்போது தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வேண்டுமென்பது அம்மாவின் நீண்ட கால கனவு.தற்போது மத்தியஅரசு மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் இந்நியாவிலேயே தமிழகம் முதலிடம் என அறிவித்துள்ளது.இதன் மூலம் அம்மாவின் கனவை முதல்வர் எடப்பாடி நனவாக்கியுள்ளார் எனக்கூறினாh.உடன் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்தகொண்டனர்.

 இதில் நகர செயலாளர் பூமாராஜா, ஒன்றிய செயலாளர் ராஜா துரை தனராஜன். பண்பாளன், போத்திராஜன் தே.மு.தி.க.மாவட்ட செயலாளர் கணபதி, வழக்கறிஞர் ரவிச்சந்திரன், கருமாத்தூர்பாண்டி, பாரதிய ஜனதா கட்சியினர் செல்லம்பட்டி, கருமாத்தூர், உசிலம்பட்டி ஒன்றியம் கொங்கப்பட்டி, பண்ணைப்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, அல்லி குண்டம் பெருமாள் கோவில்பட்டி, சேட பட்டி ஒன்றிய பகுதியில் கூட்டணி கட்சியினர்க்கு இரட்டை இலை, தாமரை, முரசு சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தனர். இதில் அதி.மு.க கூட்டணி கட்சியினர்வாக்காளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!