மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையை மறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு .பயணிகள் அவதி.மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் செல்லம்பட்டி ஊராட்சியில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயக்குமார் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையை மறித்து பிரச்சாரம் செய்ததால் சுமார் 1 மணி நேரம் கடுமையக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் செல்லம்பட்டி முதல் கருமாத்தூர் வரை அணிவகுத்து நின்றன.வேலைக்கு செல்வோர், விசேஷ நிகழ்ச்சிக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். வாகனங்கள் நெரிசல் ஏற்பட்டது.
சாலையை மறித்து அமைச்சர் பிரச்சாரம். பயணிகள் கண்டனம்
எழுதியவர்: mohan December 27, 2019, 4:05 pm




You must be logged in to post a comment.