18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் நகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு.

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் நகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு.

எழுதியவர்: mohan December 27, 2019, 3:25 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ளமுக்கிய இடங்களில் ஆக்கிரமிப்புகள், குப்பைகள் தேங்கி உள்ளது,  சாக்கடை வசதிகள் இல்லை ,என அடுக்கடுக்காக உசிலம்பட்டி நகராட்சி ஆணையரிடம் மனுக்கள் குவிந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில் இதை சரி செய்யும் நோக்கத்துடன் நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.இந்த ஆய்வில் உசிலம்பட்டி அம்மா உணவகம், பேருந்து நிலையத்தில் உள்ள வடை கடைகள், மற்றும் காய்கறி சந்தை, என அனைத்து இடங்களிலும் ஆணையாளர் நடந்தே சென்று ஆய்வு நடத்தினார்,

இந்த ஆய்வில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அகமதுகபீர், மேற்பார்வையாளர் பாண்டி,மற்றும் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் உடனிருந்தனர்.உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரியே நேரில் சென்று ஆய்வு நடத்தியதில் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!