17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பைபாஸ் சாலை போடி லயன் கிரீன்விச் அப்பார்ட்மெண்ட் அருகே குப்பையில் மர்ம நபர்கள் பற்ற வைத்த தீ

மதுரை பைபாஸ் சாலை போடி லயன் கிரீன்விச் அப்பார்ட்மெண்ட் அருகே குப்பையில் மர்ம நபர்கள் பற்ற வைத்த தீ

எழுதியவர்: mohan December 27, 2019, 11:24 am

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு கிரீன்விச் அப்பார்ட்மெண்ட் போடி லயன் பாலத்தின் கீழே மர்ம நபர்கள்  பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை தீயை பற்ற வைத்து சென்றுவிட்டார்கள். இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்பு புகையாலும் சூழப்பட்டது.  வாகன ஓட்டிகளும் அப்பார்ட்மெண்டில் உள்ள பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் தீயை அணைக்க முடியாத காரணத்தினால் மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்த தீயணைப்பு படையினர்  ரவி  தலைமையிலான குழுவினர் குப்பையில் பற்றிய தீயை அணைத்து கரும் புகையும் கட்டுப்படுத்தினர். விரைவாக வந்து தீயை அணைத்த மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் துறையினர் மேலும் தீ பரவாமல் தடுத்து விட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக புகையால் சூழப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள். இது போன்ற குப்பைகளை பற்ற வைக்கும் மர்ம நபர்கள் மீது காவல் துறையும் மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தெரிவித்தனர். விரைந்து வந்து தீயை அணைத்து மூச்சுத் திணறலுக்கு முற்றுப்புள்ளி வைத்த தீயணைப்பு துறையினர் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!