17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மது பாட்டில்கள் விற்பனை செய்த 17 நபர்கள் கைது, 499 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.82460/- பறிமுதல்

மது பாட்டில்கள் விற்பனை செய்த 17 நபர்கள் கைது, 499 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.82460/- பறிமுதல்

எழுதியவர்: mohan December 27, 2019, 9:52 am

மதுரை மாநகரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்படி மதுரை மாநகரில் உள்ள திடீர் நகர், கரிமேடு, தல்லாகுளம், எஸ். எஸ். காலனி மற்றும் மதுரை மாநகரில் உள்ள முக்கிய இடங்களில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் 17 நபர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.தஎனவே 17 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 499 மதுபாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்த பணம் ரூ.82,460/- ம் பறிமுதல் செய்யப்பட்டது. அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!