மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை காவல்நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லெட்சுமணா சிறப்பு மருத்துவமணை மற்றும் ஜோதி அருணாச்சல ட்ரஸ்ட் இனைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த மருத்துவ பரிசோதணை முகாமில் சர்க்கரை நோய், தலைக்காய சிகிச்சை, மாதவிடாய் போன்ற பிரச்சனைக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு சிகிச்கையளிக்கப்பட்டது.
மேலும் ஈசிஜி, எக்ஸ்ரே, போன்றவைகள் மூலம் உடலை பரிசோதித்து குறைபாடுகள் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டையின் மூலம் பலர் பயன்பெற்றனர். சிகிச்சை பெற்றவர்களுக்கு அதற்கான மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜோதி அருணாச்சல ட்ரஸ்ட் நிறுவனர் நடராஜ், லெட்சுமணா சிறப்பு மருத்துவமணை மருத்துவர்கள் பாலச்சந்திரன், சாந்தி. மற்றும் ஊழியர்கள் விக்னேஸ், பிரேமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா









You must be logged in to post a comment.