இராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ் தலைமையில் வனவர் சந்துரு ராஜா, வனக்காப்பாளர் ஜோசப், வனக் காவலர் செல்வராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உப்பூருக்கு அருகே வளமாவூர் கண்மாய் பகுதியில் அதிகாலை 4 மணி அளவில்ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது நான்கு டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் இருந்த ஐந்து பேர் வனத்துறையினரை பார்த்து தப்பிக்க முயன்றனர். அவர்களை
பிடித்து சோதனை செய்ததில் அரியவகை பறவையான நீலச்சிறவி பறவைகள் ( உயிருடன்). ஒன்று இறந்த நிலையிலும் மற்றும் சிறிய வலைகளும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை மாரிமுத்து 50, ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் ஆறுமுகம் 60,முனியாண்டி மகன் ஆறுமுகம் 30, மாரியப்பன் மகன் முத்து 30, கருப்பையா மகன் ஆறுமுகம் 26 ஆகியோரையும், நீலச்சிறவி பறவைகளை ராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் சுதீஷ் கூறுகையில்,பறிமுதல் செய்யப்பட்டநீல சிறவி பறவைகள் தேர்தங்கல் சரணாலயத்தில் பாதுகாப்பாக விடப்படும். பறவைகளை வேட்டையாடிவோருக்கு, வன உயிரின காப்பாளர் அசோக்குமார் அறிவுறுத்தல் படி அபராத தொகை விதிக்கப்படும்.
நீலச்சிறவி பறவைகள் ஐரோப்பா, மேற்கு ஆசியாவைச் வாழ்விடமாக கொண்டவை. நவம்பர் முதல் பிப்ரவரி வரை வெளிநாடுகளுக்கு இனப்பெருக்கத்திற்காக பறந்து செல்கின்றன. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இவை செல்கின்றன. ராமநாதபுரத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் ஒவ்வொரு வருடமும் வலசை வருகின்றன. மிகவும் அழகான அரிய வகை பறவை என்றார்.
உப்பூர் பறவைகளை வேட்டையாடிய 5 பேர் சிக்கினர்
எழுதியவர்: mohan December 25, 2019, 12:58 pm




You must be logged in to post a comment.