மதுரை உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் சார்பில் சமத்துவ கிருஸ்துமஸ் விழா சிம்மக்கல் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.அமைப்பின் நிறுவனர் சேக்மஸ்தான் வரவேற்றார். வக்ஃப் வாரிய கல்லூரியின் முன்னாள் முதல்வர் அப்துல் காதர், வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மற்றும் சமூக ஆர்வலர் இளஅமுதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. முதியோர் இல்லத்தின் மேலாளர் கிரேசியஸ் நன்றி தெரிவித்தார். சமூக ஆர்வலர்கள் முனைவர்.தௌலத்பேகம், அசோக்குமார், கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.