17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரம்: பின் வாங்கும் பாஜக-அதிர்ச்சியில் அதிமுக

குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரம்: பின் வாங்கும் பாஜக-அதிர்ச்சியில் அதிமுக

எழுதியவர்: mohan December 24, 2019, 4:10 pm

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆளும் பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. இந்த சட்டத்தை பாஜக ஆளும் மாநில முதல்வர்களே எதிர்க்கும் சூழலில் அதிமுக இதற்கு ஆதரவாக வாக்களித்து சிக்கிக் கொண்டுள்ளது.புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமல்படுத்தப்பட்டது. ஆதரவாக அதிமுகவும் வாக்களித்தது. இன்று நாடே போராட்டக் களமாக மாறுவதற்கு அதிமுகவின் வாக்களிப்பே மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அதிமுக வாக்களிக்காமல் இருந்திருந்தால் இந்த சட்டம் அமல்படுத்தப் பட்டிருக்க மாட்டாது. மேலும் நாடெங்கும் போராட்டம் நடைபெற்றிருக்கவோ, இத்தனை உயிர்பலிகள் ஏதும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்ல. நிலை இவ்வாறிருக்க, பாஜக ஆளும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை சட்டம் அமல்படுத்தமாட்டாது என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ள நிலையில் அதிமுக அதிர்ச்சியடைந்துள்ளது.மேலும் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இச்சட்டம் அமல்படுத்தமாட்டாது என்று உறுதியாக அறிவித்துவிட்டன.

ஆனால் அதிமுக சார்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதற்கு முதல்வர் எடப்பாடி என்ன பதில் வைத்திருக்கிறார்? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. மேலும் திங்கள் கிழமை திமுக நடத்திய போராட்டத்தை ஒடுக்க நினைத்து அதிலும் தோல்வி கண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!