17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வைகை  கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாக குளத்திற்கு சென்ற குடிநீர்

வைகை  கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வீணாக குளத்திற்கு சென்ற குடிநீர்

எழுதியவர்: mohan December 24, 2019, 10:27 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட   கோவில்பட்டி அருகே சாலையோரத்தில் உள்ள குளத்தின் அருகே வைகை கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்டது . பழுது காரணமாக நிலக்கோட்டை , சிலுக்குவார்பட்டி , கோட்டூர், நரியூத்து, பள்ளபட்டி,   மாலையகவுண்டன்பட்டி, அம்மையநாயக்கனூர்  பேரூராட்சி , கொடைரோடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் பல மணி நேரமாக வீணாக வெளியேறி குளத்திற்கு சென்றது .    மேலும் அவ்வழியாக சென்ற பொதுமக்கள்   மழைகாலங்களில் வைகையாற்றில் செல்லும் தண்ணீரையும்,   வீணாகும் தண்ணீரையும் இது போன்ற குழாய்கள் மூலம் நிலக்கோட்டைப்குதியில் வறண்டு கிடக்கும் 100க்கு மேற்பட்ட குளங்களில் நிரப்பினால் இனிவரும் காலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் ஏற்கனவே விவசாயத்தில் செழித்து விளங்கும் நிலக்கோட்டை தொகுதி மேலும் விவசாய நிலப் பகுதியாக மாறும்.மேலும் இதுபோன்ற திட்டத்தை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கவனம் செலுத்தி முயற்சி செய்தால் சிறப்பாக இருக்கும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!