17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் பணி தீவிரம்

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் பணி தீவிரம்

எழுதியவர்: mohan December 24, 2019, 9:24 am

திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட கவுன்சிலர்  2 பதவிக்கு 8 பேரும் ,  20 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 77 பேரும், 23 ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 93 பேரும், 217 வார்டு உறுப்பினர் பதவிக்கு 547 பேரும் தற்போது 27-ஆம் தேதி நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.      இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்  வீடு, வீடாக ,கிராமம் ,கிராமமாகச் சென்று ஆட்டோ , மினி வேன் போன்ற வாகனங்களில் தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

   இத்தேர்தலில் வாக்குச்சாவடிக்கு தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் , வாக்குப் பதிவுக்கு தேவையான வாக்கு பெட்டி மற்றும அடிப்படைத் தேவைகளான அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்து வருகிறார்கள். நிலக்கோட்டை ஒன்றியத்தில் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு உரிய முகவர்களுக்கான அடையாள அட்டையும் நேற்று வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மலர்விழி ,லாரன்ஸ் ,குணவதி  மேற்பார்வையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!