கீழக்கரையில் இன்று (23/12/2019) மாலை 04.00 மணி முதல் 05.30 மணி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது. இதில் அதிமுக, பாஜக தவிர்த்து திமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், அமைப்புகள், சங்கங்கள் என அனைவரும் கொள்ளகை வேறுபாடுகளை மறந்து இனத்திற்காக ஒன்று கூடி ஆளும் மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு திமுக நகர செயலாளர் பசீர் அகமது, வீரகுல தமிழர் படை பிரபாகரன், SDPI கட்சி அப்துல் ஹமீது ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்நிகழ்வை ஹமீது சுல்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வில் பல்லாயிரகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பினர்.






















You must be logged in to post a comment.