18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விவசாயிகள் தினத்தில் 58கிராம கால்வாய் பாசன திட்டத்தை உருவாக்கியவர்கள் நினைவிடத்தை வைகைநீரால் கழுவி சுத்தம் செய்து உறுதிமொழியேற்ற இளைஞர்கள்.

விவசாயிகள் தினத்தில் 58கிராம கால்வாய் பாசன திட்டத்தை உருவாக்கியவர்கள் நினைவிடத்தை வைகைநீரால் கழுவி சுத்தம் செய்து உறுதிமொழியேற்ற இளைஞர்கள்.

எழுதியவர்: mohan December 23, 2019, 6:33 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் 58 கிராம பாசன கால்வாயத்திட்டம். இந்த திட்டத்தை அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் மூத்த தலைவரும், உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வல்லரசு என்பவரின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த திட்டம் போதிய நிதி ஒதுக்கபடாமல் பணகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதற்கு பிறகு போதிய நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 30 வருடங்களுக்கு பிறகு 58 கிராம கால்வாய் திட்டம் முடிக்கப்பட்டு, தமிழக அரசு மூலம் சோதனை ஓட்டமாக 3முறை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் தினத்தன்று விவசாயத்திற்;கு ஆதராமான தண்ணீரை போற்றும் விதத்திலும் உசிலம்பட்டி பகுதி விவசாயிகளின் கனவுத்திட்டத்தை கொண்டு வந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் உசிலம்பட்டியைச் சேர்ந்த சௌந்திரபாண்டி தலைமையிலான இளைஞர்கள் வைகை அணையிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து முதல்தெய்வமான விநாயகர் சிலையில் வைகை நீர் ஊற்றி சுத்தம் செயது வணங்கி விட்டு தொடர்ந்து 58கிராம பாசன கால்வாய் திட்டம் கொண்டுவர காரணமாக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வல்லரசுவின் நினைவிடத்தை வைகை நீரால் கழுவி சுத்தம் செய்தனர். அதனைதொடர்ந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையையும் வைகைநீர் ஊற்றி வழிபட்டனர். பின்பு இளைஞர்கள் அனைவரும் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்து பேணிகாப்போம் என உறுதிமொழி எடுத்துகொண்டனா.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!