18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை ஒன்றியத்தில் 14வது வார்டு திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

நிலக்கோட்டை ஒன்றியத்தில் 14வது வார்டு திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

எழுதியவர்: mohan December 23, 2019, 4:44 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 20 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தற்போது தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுக திமுக போட்டியிட்டு வேலை தற்போது தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நிலக்கோட்டை ஒன்றியத்திலுள்ள 16வது வார்டு தற்போது கடும் போட்டி நிலவி வருவதால் அணைப்பட்டி , எஸ். மேட்டுப்பட்டி, குண்டலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மாயாண்டி தலைமையில் தி. மு. க. வினர் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது இந்த 16 வது வார்டில் திமுகவினர் தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் திமுக வேட்பாளர் அறிவழகன் என்ற சின்னம் ஆயிலுக்கு அமோக வரவேற்பு அளித்துள்ளார்கள். இந்த பிரச்சாரத்தில் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் உட்பட பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அதிமுக நேரடியாக போட்டியிடாத கூட்டணி வேட்பாளர் சாஸ்தாவு , பிரச்சாரத்தில் தீவிரம் காட்டாமல் தொய்வடைந்த நிலையில் பிரச்சாரம் செய்து வருவதாக இப்பகுதியினர் தெரிவித்தனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!