17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விபரீதத்தில் முடிந்த விளையாட்டு-கல்லூரி மாணவரின் கால் துண்டாகிய சோகம்

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு-கல்லூரி மாணவரின் கால் துண்டாகிய சோகம்

எழுதியவர்: mohan December 23, 2019, 4:39 pm

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் கவியரசு(20). சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார். கல்லூரி தொடர் விடுமுறையால் வீடு திரும்பினார்.தென்காசி செல்லும் பொதிகை விரைவு ரயிலில் அவர் பயணம் செய்தார். ராஜபாளையம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. பின் ரயில் கிளம்பியதும் விளையாட்டாக ஓடியவாரே படியில் ஏறியபோது கால் வழுக்கி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கினார். இதில் அவரது வலது கால் துண்டானது.உடனடியாக அபாய சங்கிலி பிடித்து இழுக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த கவியரசு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு கால் துண்டானது.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!