மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலத்தில் இருந்து காளவாசல் நோக்கி சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் நேரு நகரில் இருந்து பாலத்தின் மேல் ஏற முயன்ற கார் இருசக்கர வாகனம் வருவதை கவனிக்காமல் மேலே ஏறியதால் முட்டை ஏற்றி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த இருசக்கர வாகன ஓட்டி முட்டையுடன் கீழே விழுந்தார் .அப்போது சாலை முழுவதும் முட்டைகள் உடைந்து ஓடியது. அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகன ஓட்டி காயமின்றி தப்பினார் .பின் வாகனத்தை ஓரத்தில் நிறுத்தி காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்று கேட்ட பிறகு காயமில்லை ஏதுமின்றி சொன்னபிறகு அவர்கள் இருவரும் சமாதானமாக பேசியதில் முட்டைக்கான ரூபாயை கொடுத்துவிட்டு காரை எடுத்து சென்றார். .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.