கடந்த 02.06.2019 அன்று மதுரை மாநகர் சட்டம் & ஒழுங்கு காவல் ஆணையர் அவர்களின் அதிவிரைவுப்படையில் பணிபுரிந்த, ஆயுதப்படை காவலர் இராஜேஷ் கண்ணன் பணிமுடித்து அவரது சொந்த ஊரான பன்னியான் கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வீடிற்கு செல்லும்போது, மதுரை மாவட்டம் புளியங்குளம் என்ற இடத்தில் வாகன விபத்து ஏற்பட்டு, ஹென்னா ஜோசப் மருத்திவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் கடந்த 17.06.2019 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது ஊதிய வரவுசெலவு கணக்கு தல்லாகுளம் SBI வங்கியில் இருப்பதால், SBI வங்கி அவரது மனைவியான ஜெயபிரதா அவர்களிடம் ரூபாய்.30,00,000/- (சம்பள காப்பீடு) வங்கி காசோலையை மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்முன்னிலையில் இன்று வங்கி தலைமை அதிகாரிகள் வழங்கினார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.