18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே 100 சதவீத வாக்குபதிற்காக வெற்றிலை பாக்கு வைத்து வாக்காளர்களை வரவேற்று வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்

உசிலம்பட்டி அருகே 100 சதவீத வாக்குபதிற்காக வெற்றிலை பாக்கு வைத்து வாக்காளர்களை வரவேற்று வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்

எழுதியவர்: mohan December 23, 2019, 1:48 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு சுயேட்சையாக தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் போட்டியிடுகின்றார்.வாக்குப்பதிவின் அவசியத்தை வாக்காளர்களுக்கு உணர்த்தும் நோக்கிலும் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என எண்ணிய பாலமுருகன் வாக்காளர்கள் அனைவருக்கும் வெற்றிலை பாக்கு வைத்து வாக்குசாவடிக்கு வந்து வாக்களியுங்கள் என வினோத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

கிராம புறங்களில் தங்களுடைய இல்ல விழாக்களுக்கு உறவினர்களை வரவேற்கும் போது வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்பது ஐதீகம், அதன்படி தேர்தல் திருவிழாவின் போது வாக்குசாவடிக்கு அனைத்து வேட்பாளர்களும் வந்து 100 சதவீத வாக்குபதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்பதாகவும், வெற்றி பெற்ற பின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதோடு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக பேட்டியளித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!