குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான திமுக பேரணி தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தொடங்கியது.
எழுதியவர்: Askar December 23, 2019, 11:12 am

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான திமுக பேரணி தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தொடங்கியது. விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஐஜேகே மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். விவசாயிகள், மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகளும் இப்பேரணியில் பங்கேற்றுள்ளன.



You must be logged in to post a comment.